கோவை, பேரூர் நாட்டியவிழா இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று கோவையைச் சேர்ந்த கலைஞர் ஒருவரின் பரதநாட்டியம், சென்னை நடன பள்ளி ஒன்று நடத்திய அறுபடை வீடு நாட்டிய நாடகம் மற்றும் இறுதியாக பெங்களூர் ஸ்ரீஹரி-சேத்னா குழவினரின் கதக் நடனமும் நடைபெற்றது.

பட்டீஸ்வரர் ஆலயம், பேரூர், கோவை
கோவை கலைஞர் கச்சேரி சுமார் ரகம். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டார். என்றாலும் தெளிவான தமிழில் உச்சரித்து விளக்கிய விதம் அருமை. விநாயகர் சிறப்பு, சிவபெருமான் நடனக் காட்சிகளை வழங்கினார்.
பரதநாட்டியமும் நாட்டிய நாடகமும் நேற்றைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது சாதரணம்தான் என்றாலும், நாட்டிய நாடகம் அறுபடை வீடு என்று ஜனரஞ்சகமான தலைப்பில் அமைந்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர். ஏகப்பட்ட அப்ளாஸ். சிறிய குழந்தைகள் முதல் பெண்மணிகள் வரை அனைவரும் கலந்து சிறப்பித்தனர். ஒரு மணி நேரத்தில் அறுபடை வீடுகளைச் சித்தரிப்பதற்கு மிகச் சிறந்த திட்டமிடல் வேண்டும். கேப் கிடைத்த நேரத்தில் மூன்று காவடிச்சிந்து பாடல்கள் போனஸாகக் கிடைத்தன. (அழகு தெய்வமாக வந்து.. ஆகா.. எழுந்து ஆடவேண்டும் போல் இருந்தது). சிறுவர் சிறுமியர்கள் மிக அம்சமாக வழங்கினர். இறுதியில் திருத்தணிகை வரலாற்றில் வள்ளிதிருமணக் காட்சியில் வள்ளியாக வந்த கலைஞரின் நடனம்.. வாவ்… சிவன், பார்வதி, நாரதர், விநாயகர், முருகன், அவ்வை, கார்த்திகைப் பெண்கள், சூரபத்மன் மற்றும் அவருடைய கூட்டாளிகள், தெய்வானை, வள்ளி என்று வேடங்கள் அனைத்தும் பக்கா!! முருகனாக வந்த குழந்தைகள் துருதுரு! (இறுதியில் சிறுவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது அப்ளா…..ஸ்!)
இந்தக் குழவினர் நிறைய நாட்டிய நாடகங்களை அறங்கேற்றியதாகக் கூறினர். இணையத்தில் உலாவிய பொழுது இந்த சுட்டி கிடைத்தது. (நன்றி ஹிந்து)
http://www.thehindu.com/2009/03/04/stories/2009030450410200.htm
இறுதியாக
ஸ்ரீஹரிசேத்னா குழவினரின் கதக் நடனம், அவர்களின் professionalism அவர்கள் நேர்த்தியில் தெரிந்தது. கலர்ஃபுல். ராதா கிருஷ்ணன் காதல் நடனம் பலே!!

http://www.thehindu.com/fr/2009/04/24/stories/2009042451030400.htm
- நான் சென்ற இரண்டு நாட்களிலும், சரியான நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. அதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
- நாட்டியப் பள்ளிகள் வியாபார நோக்கில் இருந்தாலும், அவர்கள் மூலமாகவே இந்தக் கலைகள் வளர்கின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
- இதற்கென சிறுபிராயத்திலிருந்து பயிற்சி எடுத்துவரும் அவர்களது முயற்சிக்கு நான் தலை வணங்கியே ஆகவேண்டும். மதம், கலாச்சார விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, இது அவரவர்தம் திறமையின் வெளிப்பாடு. மண்ணின் மணம்.
- கலைஞர்களுக்கு தற்பெருமை பேசுவது பழக்கமாகி வருகிறது. இளம் கலைஞர்களையும் அந்தப் பழக்கம் விட்டுவைக்கவில்லை
- இரண்டு நாள் நிகழ்வுகளில், இன்னும் மாதவி முத்கல் அவர்களின் ஒடிஸி நடனம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.. யாஹி மாதவ.. யாஹி கேஷவ… இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது.
அடுத்த வருட நிகழ்ச்சிக்காகக் காத்திருப்போம்.
[...] natyanjali 2009 – final day celebration – paper cuttings நேற்றைய தினம் பேரூர் பட்டீசுவரர் சன்…. இன்றைய தினசரியில் ஒளிப்படங்கள் [...]
By: Perur natyanjali 2009 – final day celebration – paper cuttings « Bx By Bz on October 12, 2009
at 8:40 am