சில பல பதிவுகளைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. அரசியல் ரீதியான பதிவு என்றால் சாக்கடை மாதிரி மூக்கைப் பொத்திக்கொண்டு போக வைத்து விடுகிறார்கள் நம் வலைப் பதிவர்கள். ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ விமர்சனங்களோ எழுதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவ்விடமும் வெற்றி நமதே, குற்றி நமதே என்று அலம்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது பதிவுலக ஆர்வத்திற்கு வைக்கப்படும் தீ! யாரோ ஒரு அரசியல் கட்சிக்கு பதிவுலகில் வந்து பிரச்சாரம் செய்யும் இந்த அறிவாளிகளின் நோக்கம் என்ன? இந்தத் தேர்தல் முடியும் வரை இந்த ஆட்கள் என்னவெல்லாம் எழுதி தமிழ் இணைய உலகிற்கு கிலியை உண்டு பண்ணப் போகிறார்களோ தெரியலை. நினைத்தால் குளிர் காய்ச்சல் கண்டுவிடும் போல் தெரிகிறது!
ஏற்கனவே பத்திரிகைகளை எடுத்தால் சினிமா அல்லது அரசியல் என்பதைத் தவிற என்னவோ சிந்திக்க எதுவுமே இல்லாதது போல தெரிகிறது. அது தவிற யார் பக்கமும் சாயாத பத்திரிக்கைகளைக் காணுவதே அபூர்வமாக இருக்கிறது. தொலைக்காட்சி… உவ்வே.. நிலைமை அவ்வாறு இருக்கையில் சற்று ஆறுதல் அளிப்பதாகத் தோன்றியது தமிழிணைய பதிவுலகம்.
ஆரம்ப காலத்தில் பதிவெழுதுங்கோ பதிவெழுதுங்கோ என்று கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தோம்…. இப்பத் தோன்றுகிறது.. பதிவெழுதாதீர் அய்யா என்று கெஞ்சலாமா என்று! தலையெழுத்து!
. இப்பத் தோன்றுகிறது.. பதிவெழுதாதீர் அய்யா என்று கெஞ்சலாமா என்று! தலையெழுத்து!//
அதே தான் . அரசியல் இங்கேயும் புகுந்து விட்டது..
By: jmms on March 6, 2011
at 7:14 am